முதலில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். நிறைய பேர் புது தீர்மானங்கள் எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் - அடுத்த ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அனைவருக்கும் ஏற்கனவே ஒரு யோசனை இருக்கிறது! எதுவும் சாத்தியம் - ஆனால் மிக முக்கியமாக, இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைவு பெறுவது மிக முக்கியமான விஷயம், நீங்கள் உண்மையில் சந்தோஷமாக இருப்பது!
ஒரு விஷயம் அல்லது இன்னொரு விஷயத்தப் பற்றி அல்லது ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது நடக்கவில்லை என்பதால் அல்ல –மூலத்திலிருந்து (source), மகிழ்ச்சியாக இருப்பது, மூலம், அது தான் நீங்கள் அந்த மூலம் நீங்கள் தான் என்று புரிந்துகொள்வது. மகிழ்ச்சியின் மூலம் நீங்கள் என்று புரிந்துகொள்வது. தெளிவின் மூலம் நீங்கள் என்று புரிந்துகொள்வது, உங்களுக்காக புரிந்துகொள்வது. இந்த விஷயங்கள் தான் நாம் மறந்து விடுகிறோம். புரிந்துகொள்வது.
நாம், “ஆமா, புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று உட்கார்ந்து சொல்வது எளிது யாரோ ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனால் மகிழ்ச்சியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஹேப்பி-நெஸ் என்றால் உண்மையில் என்ன என்று நமக்கு என்ன தெரியும்? சந்தோஷம்உண்மையிலேயே எங்கு வாழ்கிறது என்பது நமக்கு என்ன தெரியும் - அது நம் இதயத்தில இருக்கிறது, அது நம்மில் வாழ்கிறத அதுதான் நாம் விரும்பும் ஆனந்தம்.
பல முறை, நாம் வெளியே உள்ள சூழ்நிலைகளை நோக்கி பார்க்கிறோம். நாம் வெளிப்புற விஷயங்களை நோக்கி பார்க்கிறோம் அவை மாற முடிந்தால், நாங்கள் சந்தோஷமாக இருக்க முடியும் என்று. ஆனால் அதற்கும் உண்மையான சந்தோஷத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உண்மையான சந்தோஷம் உங்கள் உள்ளிருந்து வருகிறது. இதன் தொடர்பு நீங்கள் யார் என்பதுடனும் உங்கள் புரிந்துணர்வுடனும் - மற்றும் உங்களுக்குள் ஏற்கனவே இருக்கும் அந்த அழகான நீங்கள் என்பதை நோக்கிய உங்கள் முயற்சி மற்றும் உங்கள் முழு ஈடுபாடுடனும்..
எனவே, ஆமாம், நாம் அனைவருமே நம் வெளிப்புற சூழ்நிலைகளை மாற்ற விரும்புவோம், ஒருவேளை- ஒருவேளை நம் சந்தோஷம் அதனால் கிடைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி அந்த விஷயங்ளை சார்ந்துஇல்லை.
வரவிருக்கும் இந்த 2020 அண்டில் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு சிறந்த உலகமாக மாற்றுவதற்காக நம் வளங்களை, நம்முடைய புரிந்தல்களை, நம் தெளிவுகளை சேர்க்க முடிந்தால் ? அதைச் செய்ய, நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வது மிக அவசியம்.
எனவே, அந்த முழு ஈடுபாட்டை நாம் நம்மீது கொண்டு வர வேண்டும் பின்னர் இந்த உலகத்தை நோக்கி அந்த ஈடுபாட்டைக் கொண்டுவர வேண்டும், மேலும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க, நம் சந்ததியினருக்காக நம் குழந்தைகளுக்காக, மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க. ஏனென்றால், வரப்போகிறவர்கள், அவர்கள் அனைவரும் நமக்கு தெரியாதவர்கள் - ஒருவேளை நமக்கு அவர்களுடன் எந்த உறவும் கூட இருக்காது.
அந்த எல்லா தலைமுறைகள், அவர்களுக்கு ஒரு உலகத்தை ஒரு அழகான உலகத்தை விட்டு செல்ல. ஏற்கனவே இங்கே இருக்கும் அந்த அழகான, அழகான, அழகான இயற்கையைப் பற்றி ஒரு தெளிவும் புரிந்துணர்வும் இருக்கிறது என்று! எப்படியாவது அதை கவனித்து பராமரிக்க நம்மை அது கெஞ்சிகொண்டிருக்கிறது.
நாம் போராடி வரும் இந்த போர்களுக்கு நாம் ஒன்று சேர்ந்து நிஜமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தீர்மானங்கள், உங்களுக்குத் தெரியும், நிச்சயமாக, நம்மால் வெளி உலகில் தீர்மானங்களை எடுக்க முடியும், ஆனால் அவசியமாக செய்ய வேண்டிய தீர்மானங்கள், உண்மையில் உங்கள் இதயத்திலிருந்து வரும் தீர்மானங்கள்
அது, “ஆம், நான் என் உலகில் அமைதியை விரும்புகிறேன். நான் என் வாழ்க்கையில் அமைதியை விரும்புகிறேன்; நான் என் உலகில் அமைதியை விரும்புகிறேன். நான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை விரும்புகிறேன்; என் உலகில் எனக்கு மகிழ்ச்சி வேண்டும்! ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். "
எது கெட்டது, எது பயங்கரமானது "இது எப்படி இருக்க முடியும்" "இது எப்படி இருக்க முடியும்" "நாம் இதை தவறாக செய்கிறோம்" "நாம் இந்த தவறை செய்கிறோம்" என்ற ஊகங்கள் அல்ல. எனக்குத் தெரியும், மனிதர்களாக இருப்பதால் நாம் நிறைய தவறுகள் செய்துள்ளோம். நாம் பல விஷயங்களை சரியாகவும் விஷயங்களைச் செய்துள்ளோம் - ஏனென்றால் நாம் செய்யக்கூடிய நன்மைகளில் நம்மால் கவனம் செலுத்த முடியும்.
அதுதான் நடக்க வேண்டும். பிறகு, அந்த நன்மையில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த உலகில் சில நல்ல விஷயங்கள் வரக்கூடும். அது, வரவிருக்கும் அடுத்த ஆண்டிற்கான, 2020 ஆம் ஆண்டிற்கான நம் தீர்மானமாக இருக்கலாம் – அதாவது நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அன்பையும் புரிதலையும் கருணையயும் கொண்டு வர முயலுவது.
மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- பிரேம் ராவத்
உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசான்கள் அனைவரும் அமைதி உங்களுக்குள் நிலவுகிறது என்று கூறியிருக்கிறார்கள். அத்தகைய ஒரு சிறந்த ஆசிரியர், பிரேம் ராவத்தின் தந்தை ஹன்ஸ் ராம் சிங் ராவத் ஆவார். ஹன்ஸ் பன்னிரண்டு வயதில் இந்தியா முழுவதும் உள் அமைதி பற்றிய ஞானத்தை பரப்பத் தொடங்கினார். அவருடைய மிகப் பெரிய போதனைகள் என்னவென்றால், எல்லா மதங்களும் ஒரே மூலத்திலிருந்து உருவாகின்றன, அமைதி என்பது பிரிக்க முடியாதது, ஒவ்வொரு நபருக்கும் அமைதியைக் கண்டுபிடிக்கும் திறன் உள்ளது.
நாம் ஹன்ஸ்ஜியின் 119 வது பிறந்தநாளை பிரேமுடன் கொண்டாடுகிறோம், மேலும் தந்தையிடமிருந்து மகனுக்கு அன்புடன் ஒப்படைக்கப்பட்ட ஞான வழிமுறைக்கு நம் முக்கியத்துவத்தை புதுப்பிக்கிறோம். இந்த சிறப்பு ஹன்ஸ் ஜெயந்தி ஆண்டு விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பிரேம் தனது உண்மையை நமக்காக பேசுகிறார். ஒரு குழந்தையாக இருந்தபோது, பிரேம் தனது தந்தையின் பேச்சைக் கேட்க கடல்போல திறண்டு வரும் மக்களை காணுவதை விரும்பினார். கூடியிருந்த மக்கள் ஹன்ஸ் பேசும்பொழுது, ஒரு குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும்படி அமைதியாக அவர் சொல்லும் ஒவ்வொரு வார்தையையும் உன்னிப்பாக கேட்பார்கள். சிறுவனாக இருந்தபோதும், பிரேமை பேச மேடை யில் அழைப்பார்கள். அவருக்கு அவரது தந்தையைப் போலவே அதே மரியாதை கிடைத்தது

நம் மூச்சு வருவதையும் போவதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். 2020 ஆம் ஆண்டு தனது முதல் நிகழ்வில், பிரேம் ராவத், டென்வர், கொலோராடோவில் பார்வையாளர்களிடம், உயிரைக் கொண்டுவரும் இந்த சுவாசத்தின் மகிமையால், நமக்கு அனைத்தும் சாத்தியம் என எடுத்துரைத்தார்,

5 நகர “உற்சாக சுற்றுப்பயணம் 2022”
டெல்லி, இந்தியாவில், மார்ச் 27, 2022 அன்று ஆரம்பமாகியது. பிரேம் ராவத் அவர்களின் செய்தியானது, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, TimelessToday ஆப்ஸ் மற்றும் இணையதளம் மூலம் 88 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 11,000 பார்வையாளர்களின் மனதினைக் கவர்ந்ததோடு மட்டுமன்றி உற்சாகத்தையும் அளித்தது, அதே நேரத்தில் 25,000 க்கும் அதிகமானோர் நேரில் கலந்து கொண்டனர்.
கோவிட்-19 இனால் உலகம் பாதிப்படைந்த பின்பு இந்தியாவில் நடந்த முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
வாழ்க்கையையே மாற்றும் இந்த நிகழ்ச்சியை உங்கள் TimelessToday கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாவில் ஆன்-டிமாண்ட் மறு ஒளிபரப்பு மூலம் நீங்கள் இப்போது பார்த்து அனுபவிக்கலாம்.
உங்கள் வீட்டில் சௌகரியமாக இருந்தபடியே ஆன்-டிமாண்ட் மறு ஒளிபரப்பில் இதனைக் கேட்கலாம் அல்லது பார்க்கலாம்.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா உங்களிடம் உள்ளதா?
உங்கள் வசதிக்கேற்ப TimelessToday மொபைல் ஆப்ஸில் அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து, ஆன்-டிமாண்ட் மறு ஒளிபரப்பை பார்த்து ஆனந்தமடையுங்கள்.